Headlines News :
Home » » காவல்துறையினருக்கு லஞ்சப் பணம் வழங்காமையே பிரித்தானியப் பெண் நாடு கடத்தப்படார்!!

காவல்துறையினருக்கு லஞ்சப் பணம் வழங்காமையே பிரித்தானியப் பெண் நாடு கடத்தப்படார்!!

காவற்துறையினர் கோரிய லஞ்ச
பணத்தை வழங்காததாலேயே புத்தரின்
உருவத்தை பச்சைக் குத்தி இருந்த பிரித்தானிய
பெண் நாடு கடத்தப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்
டில்லிக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். அங்கு அவர் ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்ட
போது, இதனைத் தெரிவித்துள்ளார்.
காவற்துறை அதிகாரி ஒருவர் தம்மை பின்தொடர்ந்து தொலை செய்ததாகவும், தம்மிடம் லஞ்சப் பணத்தை கேட்டதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இதனை வழங்க தாம் மறுப்பு தெரிவித்த நிலையிலேயே அவர் தம்மை கைது செய்து நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நீதிமன்றத்தில் அவரை எதுவும் பேச அனுமதிக்காமலே இந்த நாடு கடத்தல்
உத்தரவை பிறப்பித்துள்ளது.  இதேவேளை அவர் நாடுகடத்தப்பட்டமைக்கு ஆசிய மனித உரிமைகள்
கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்த சட்ட்தின் கீழ் அவர் நாடுகடத்தப்பட்டார் என்றும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள
அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Banner Ads

Friends Site