Headlines News :
Home » » தீவகத்தில் திடீர் காவலரன் அமைக்கும் கடற்படையினர்! அச்சத்தில் மக்கள்

தீவகத்தில் திடீர் காவலரன் அமைக்கும் கடற்படையினர்! அச்சத்தில் மக்கள்

தீவகத்தின் கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் தொழில் புரியும் இடங்களுக்கு அண்மையில் அவசர அவசரமாக காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் கடற்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர்.
தீவகத்தின் புங்குடுதீவு, வேலணை, ஊர்காவற்றுறை பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளிலேயே பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் கண்காணிப்புக்களை அதிகரிக்கும் நோக்குடன் இக் காவலரண்களை அமைக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்
வேலணை அராலி சந்திக்கு அருகில் பாரிய படைமுகாம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து கரையோரப் பகுதிகளில் காவலரண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியான கண்காணிப்புக்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கரையோரப் பகுதி மக்கள் பீதி ஏற்பட்டுள்ளது.
மேற்படி செயற்பாடுகளால் தங்களின் சுதந்திரமான தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இளைஞர்கள் தொழிலில் ஈடுபடுவதற்குத் தயங்குகின்றனர் என்றும் கடற் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தீவக்-கரையோரப்-பகுதிகளில்-காவலரண்கள்-அமைக்கப்படுகின்றன.
Share this article :

Banner Ads

Friends Site