சிவஞானம் செல்வதீபன் மீது யாழ் புறாப்பொறுக்கியில் வைத்து இனம் தெரியாத இருவரால் வழிமறிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் இரும்புக்கம்பியினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிற்கு ஆபத்தான நிலையில் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் சென்று கொண்டு இருந்த இவரின் பின்னால் சென்ற இனம்தெரியாதோர் நீ ஊடகவியலாளரா? ஏன கேள்வி எழுப்பியதோடு தலையில் பலமாக தாக்கி உள்ளதாக அங்கிருந்து எமது இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. சற்று முன் இடம்பெற்ற தாக்குதலில் தப்பி ஓட முற்பட்ட செல்வதீபனை கலைத்துச் சென்ற இனம் தெரியாதோர் மேலும் தாக்கிய போது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கால் முறிவடைந்திருக்கலாம் என மந்திகை வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


