Headlines News :
Home » » மூவரின் கொலை குறித்து ஐ.நாவில் கேள்வி

மூவரின் கொலை குறித்து ஐ.நாவில் கேள்வி


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து நேற்றையதினம் கோபி உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையக செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.   எனினும் ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டெபன் டுஜாரிக் இதற்கான பதில்கள் எதனையும் வழங்கவில்லை.   எவ்வாறாயினும் இலங்கை தாம் பொறுப்புக் கூற வேண்டியங்கள் விடயங்களில் இருந்து விலக முடியாது என்று பொது செயலாளர் பான் கீ மூன் முன்னதாக தெரிவித்திருந்த கருத்தை மீண்டும் அவரது பேச்சாளர் வலியுறுத்தினார்.   இதேவேளை அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதரகத்துக்கு முன்னால் நேற்றையதினம் சர்வதேச மன்னிப்பு சபையினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இன்னர் சிட்டி பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.   திருகோணமலையில் இடம்பெற்ற படுகொலை போன்ற விடயங்களுக்கு விளக்கம் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. 
Share this article :

Banner Ads

Friends Site