Headlines News :
Home » » இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டம் அமுல்?

இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டம் அமுல்?

இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் தகவல் ஒன்று தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரங்களில் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கு எதிரான விசாரணைக் குழு அறிவிக்கப்படவுள்ளது.
இந்த குழுவின் முன்னால் சாட்சி வழங்குவதை தடுக்கும் நோக்கில், வடக்கு கிழக்கிலும்,  தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் அரசாங்கத்துக்கு எதிரான தரப்பினரை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்படுகின்றவர்களை 48 மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடியாதுள்ளது.
இந்த நிலையில் கைது நடவடிக்கைகளுக்கு சட்ட ரீதியான அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் மீண்டும் அவசகால சட்டத்தை அமுலாக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
Share this article :

Banner Ads

Friends Site