சாவகச்சேரி மறவன்புலமத்தி  பகுதிக்கு அப்பகுதி மக்களின் வேண்டுகோளிற்கிணங்க மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் (23/04/2014) புதன்கிழமை அன்று நேரில் சென்று மக்களை சந்தித்தார். 
இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்கள் இவர்கள் 2010 மீள்குடியேற்றப்படர்கள் சுவீஸ் நிறுவனமானது வீடுதிட்டம் மற்றும் மின்சார வசதிகளை வழங்கியுள்ளது ஆனால்  இவர்கள் எதிநோக்கும் மிக முக்கிய பிரச்சனை குடிதண்ணீர் மற்றும் பாதை ஆகியனவாகும் இவர்களின் குடிநீர் தேவைக்கு ஒரு கிணறு மட்டுமே 150 குடும்பபவனைக்காக காணபடுகின்றது அந்த கிணறும் மிகவும் மாசுபட்டதாகவே காணப்படுகின்றது.அதனை திருத்தி தரும்படியும் தமது பகுதியில் காணப்படும் சிறிய தாமரை குளங்களையும்புனரமைத்து  தரும்படியும் கோரிக்கை வைத்திருந்தார்கள். கிணற்றினை தனது நிதி ஒதுக்கீட்டில் திருத்தி தருவதகாக வாக்களித்த உருப்பினர்  சிறு குளங்கள் சம்மந்தமாக விவசாய அமைச்சருடன்  பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். மாகாணசபை உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் இப் பகுதி மக்கள் விவசாயம் மற்றும் கடல்தொழில் ஆகிய தொழில்களையே மேற்கொள்கின்றார்கள் அனால் காலநிலை மாற்றத்தினால் இவர்களது வருமானங்கள் பாதிக்கபட்டுள்ளது மிகவும் வறுமையான சூழலிலையே வாழ்கின்றார்கள் இவர்களிற்கான. குடிதண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.