Headlines News :
Home » » சூறாவளி புயலில் சிக்கி 2 பேர் சாவு

சூறாவளி புயலில் சிக்கி 2 பேர் சாவு

அமெரிக்காவில் ஒக்லஹோமா நகரை தாக்கிய திடீர் சூறாவளி புயலில் சிக்கி 2 பேர் பலியானார்கள்.அமெரிக்காவில் மத்தியமேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நேற்று மாலை திடீரென சூறாவளி புயல் வீசியது. இதனால் ஒட்டாவா கவுன்டியில் உள்ள ஒக்லஹோமா நகரில் இருந்த பல கட்டிடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்தன.

இந்த சூறாவளி புயலில் நகரில் இருந்த மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. அந்நகரில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீது மரம் முறிந்து விழுந்தது. சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள்.சூறாவளி புயலில் சிக்கி சேதமான கட்டிடங்கள் குறித்த விவரங்களும் பலியானவர்களின் எண்ணிக்கையும் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று ஒட்டாவா கவுன்டியின் ஷெரீப்பின் செய்தியாளர் கோலீன் தாம்சன் கூறினார். 
Share this article :

Banner Ads

Friends Site