Headlines News :
Home » » 16 தமிழ் அமைப்புகளை இலங்கை தடைசெய்தமையை GTAJ அமைப்பு கண்டிக்கிறது !

16 தமிழ் அமைப்புகளை இலங்கை தடைசெய்தமையை GTAJ அமைப்பு கண்டிக்கிறது !

புலம்பெயர் நாடுகளில் உள்ள 16 தமிழ் அமைப்புகளை இலங்கை அரசானது தடைசெய்துள்ளமையை, உலகத் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம்(GTAJ) வன்மையாகக் கண்டித்துள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற செயல் குழு கூட்டத்தில் அதன் அனைத்து உறுப்பினர்களும் கூடி ஏகமனதாக இத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்கள். 39 தமிழ் இணையங்களை ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள GTAJ TAMIL ASSOCIATION OF JOURNALISTS என்னும் ஊடகவியலாளர் அமைப்பு, கடந்த 4ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள, தமிழ் அமைப்புகளை தடைசெய்துள்ளமை தொடர்பாக GTAJ அமைப்பு பிரித்தானிய எம்.பிக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தவுள்ளது. இதனூடாக பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக கவனயீர்பு ஒன்றைக் கொண்டுவரவும், உலகத் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அத்தோடு மக்கள் மத்தியில் விழிப்புணர்சி ஒன்றை ஏற்படுத்த மற்றும் , இலங்கை அரசின் இத் தடையை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம் நடைபெறவேண்டும் எனவும், பிரதமர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றை சமர்பிக்கவேண்டும் எனற யோசனையும் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அமைப்புகள் அனைத்தும் ஒன்றினைந்து இப்போராட்டத்தில் பங்கெடுக்கவேண்டும் எனவும், எமது ஊடகவியலாளர் அமைப்பு தாழ்மையான கோரிக்கையை முன்வைத்துள்ளது என்பதும் இன்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Share this article :

Banner Ads

Friends Site