Headlines News :
Home » » சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டார் நவநீதம்பிள்ளை

சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டார் நவநீதம்பிள்ளை

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுங் சே வை சந்தித்த போதே, நவநீதம்பிள்ளை இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
தென்கொரிய குழுவுடனான சந்திப்பின் போது, நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
இந்த உயர்நிலைக் கலந்தாய்வின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் கூட ஜெனிவாவில் தங்கியிருந்தார்.
வரும் வியாழக்கிழமை சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், தென்கொரிய அரசாங்கத்தை அதற்குச் சாதகமாகத் திருப்பும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட நகர்வு இது என்று அந்த வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 47 நாடுகளில் தென்கொரியாவும் ஒன்றாகும்.
அமெரிக்கத் தீர்மானத்துக்கு நவநீதம்பிள்ளை வெளிப்படையாக ஆதரவு கோரி வருகிறார்.
முன்னாள் தென்னாபிரிக்க அதிகாரியான அவர், தனது சொந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது கூட வடகொரியாவுடன் ஒப்பிடப்படும் நிலையை சிறிலங்கா சந்தித்திருக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

Banner Ads

Friends Site