Headlines News :
Home » , , » உடனடி அனைத்துலக விசாரணை: லண்டனில் இருந்து புறப்பட்டது நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம்!

உடனடி அனைத்துலக விசாரணை: லண்டனில் இருந்து புறப்பட்டது நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச்சபைத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், ஜெனீவாவினை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் லண்டனில் இருந்து புறப்பட்டது. 
பிரித்தானிய பிரதமருக்கு கோரிக்கை மனுவொன்றினைக் கையளித்தவாறு, பிரித்தானிய பிரதமர் அலுவலக வாயிலில் இருந்து இந்த நடை பயணம் புறப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிகளான திருக்குமரன் (பிரித்தானியா) ,யோகேந்திரன் (கனடா) ஆகியோருடன் அமிர்தம் ஜயா அவர்கள் பொதுமகனாக இந்த நடை பயணத்தில் பங்கெடுத்துள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் முன்னெடுக்கப்படும் இந்தநடை பயணமானது, தலைநகர் பாரிஸ் ஊடாக 21-03-2014ம் நாளன்று ஜெனீவாவினை சென்றடையவுள்ளது.
இந்த நடை பயணத்தின் ஊடாக வேற்றின மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களின் நீதிக்கான நியாயப்பாடுகளை ஆங்கிலம் – பிரென்சு மொழிகளில் விநியோகித்தும், கிடைக்கக் கூடிய வாய்ப்புகளில் அரசியல் அரச பிரதிநிதிகளை சந்தித்து மனுக்களை கையளித்தவாறும், இந்த நடை பயணத்தினை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Banner Ads

Friends Site