Headlines News :
Home » » குருநகரில் இன்று சுற்றிவளைப்பு

குருநகரில் இன்று சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் குருநகர்ப்பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து இன்று காலை சுற்றிவனைப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அதன்படி குருநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆயுதங்கள் மற்றும் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினையும் தேடுதல் நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அங்கு ஆயுதங்களோ அல்லது கஞ்சாவோ மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குருநகர்ப்பகுதியில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நேற்று கருத்துவேறுபாடு ஏற்பட்டு மோதல் நிலையினை அடைந்திருந்தது. அதனையடுத்து ஒரு பகுதியினரால் குறித்த வீட்டில் ஆயுதங்களும் கஞ்சாவும் இருப்பதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனாலேயே இந்தச் சுற்றிவளைப்பும் தேடுதலும் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
Share this article :

Banner Ads

Friends Site