கிளிநொச்சியில் நேற்று (26-03-2014) பொதுச் சந்தையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி உடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்;டதோடு அவரது வீடியோ கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த ஊடவிகவியலாளரினால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் வியாபார அனுமதிகள் புதுப்பிக்கப்படாத மற்றும் கரைச்சி பிரதேசசபைக்கு செலுத்த வேண்டிய மாதாந்த கட்டணங்கள் செலுத்தாத வியாபார நிலையங்கள் சீல் வைக்கப்பட்டது இந்த சம்பவத்தை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரே தாக்கப்பட்டதோடு அவரது வீடியோ கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் மூன்று உத்தியோகத்தர்களே இவ்வாறு நாகரீகமற்று நடந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. பொதுச்சந்தையில் வெளிப்படையாக இடம்பெற்ற இந்தச் சம்வவத்தை பதிவுசெய்யத போது குறித்த உத்தியோகத்தர்கள் மூவரினாலும் ஊடகவியலாளர்கள் பலர் முன்னிலையில் தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களால் அவமதிக்கப்பட்டதோடு ஒரு தொலைகாட்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்டு அவரது வீடியோ கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் எதிர்நோக்கிய இரண்டாவது மோசமான சம்பவம் இதுவாகும்.
ஊடகவியலாளர்கள் தங்களின் ஊடக அடையாள அட்டையை காட்டி உறுதிப்படுத்திய பின்னரும் குறித்த நபர்களினால் தாக்கப்பட்டு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைபாட்டினை நேற்று பிற்பகல் சம்மந்தப்பட்டவர்கள் மீது மேற்கொண்டுள்ளார்.


