கிளிநொச்சி தர்மபுரம் பிரதேசத்தில் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவரென புதிய கதையொன்றினை இலங்கை இராணுவம் அவிழ்த்து விட்டுள்ளது. புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த நபரை கைது செய்ய முயற்சி எடுக்கப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன் தேவை ஏற்பட்டால் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கு ஆதரவாக துண்டுப்பிரசுரம் விநியோகித்தமையே குறித்த இளைஞன் மீதான குற்றச்சாட்டு எனவும் அவரது தகவலை தரும்படி கர்ப்பிணியான மனைவியினை படையினர் தடுத்து வைத்து சித்திரவதை செய்து வருவதாகவும் மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.


