Headlines News :
Home » , » மஹிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் நடைபெற்ற ஆரப்பாட்டம்!

மஹிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் நடைபெற்ற ஆரப்பாட்டம்!

மிழ் இனப் படுகொலை சூத்திரதாரி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று  இலண்டன் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கெதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
மாநாடு நடைபெற உள்ள மல்பரோ-ஹவுக்குமுன்பாக, எம் உறவுகளை கொன்றொழித்து யுத்தக்குற்றச் செயல்களில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு எதிராக  கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது..
இன்று மாலை 4:00 மணிக்கு இவ் ஆர்ப்பாட்டம் பொதுநலவாய செயலகம் முன்பாக நடைபெற்றுள்ளது.

இக் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Banner Ads

Friends Site