கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸின் பூதவுடல் இன்று இவரது பிறப்பிடமான யாழ். வடமராட்சி மத்திகைக்கு கொண்டு வரப்பட்டது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சடலம் புதைக்கப்படவுள்ளது.
பிரிட்டன் பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் 2007ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பிரிட்டனில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டிக் கைது செய்யப்பட்ட அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.



