மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரத்ன மீது ஜனாதிபதி பாதுபாப்பு (president security division) பிரிவினர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிருலப்பனை பகுதியில் வைத்து இன்று நண்பகல் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலின்போது காயமடைந்த உதுல் பிரேமரத்ன தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி பாதுபாப்பு பிரிவினர் ஒன்றுக்கு வழிவிடுதல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.
கறுப்பு மற்றும் வௌ்ளை நிற டிபென்டர் வாகனங்களில் வந்தவர்களே இத்தாக்குதலை நடத்தியதாக மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு அந்த அமைப்பு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


