Headlines News :
Home » » கோபிதாஸ் மரணம் தொடர்பில் பொய் பிரசாரம் செய்வோருக்கு எதிராக வழக்கு! மிரட்டுகிறார் சிறைச்சாலை ஆணையாளர்

கோபிதாஸ் மரணம் தொடர்பில் பொய் பிரசாரம் செய்வோருக்கு எதிராக வழக்கு! மிரட்டுகிறார் சிறைச்சாலை ஆணையாளர்

தமிழீழ விடுதலைப்
புலி கைதியின் மரணம்
தொடர்பில் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராக
வழக்குத் தொடரப்பட உள்ளதாக
சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ.பல்லேகம
தெரிவித்துள்ளார். வெலிக்கடைச் சிறையில் நோய்
வாய்ப்பட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப்
புலிக் கைதி விஸ்வலிங்கம் கோபிதாசின்
மரணத்தை சில தமிழ் அரசியல்வாதிகள்
கொலையாக சித்தரிக்க முயல்கின்றனர். இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிராக
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கப்பல் மூலம் புலிகளுக்காக ஆயுதக்
கடத்தலில் ஈடுபட்டமைக்காக
கோபிதாசனுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்ட இருதயத்தின் உட்புற நரம்பு ஒன்று வெடித்த
காரணத்தினால் கோபிதாசன் உயிரிழந்துள்ளார்
என்பது விசாரணைகளின் மூலம்
தெரியவந்துள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் சில தமிழ் அரசியல்
கட்சிகளின் நடவடிக்கைகள்
அதிருப்தி அளிக்கும் வகையில்
அமைந்துள்ளது. புலி உறுப்பினரின் மரணம் தொடர்பில் போலிப் பிரச்சாரம் செய்யும் எவராக இருந்தாலும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பல்லேகம தெரிவித்துள்ளார்.
Share this article :

Banner Ads

Friends Site