முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் 02 இராட்சத திருக்கை மீன்கள் அகப்பட்டன.
மணற்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மேற்படி மீனவரின் வலையில் அகப்பட்ட தலா 1,000 கிலோ நிறையுடைய 02 திருக்கைகளும் 160,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக குறித்த மீனவர் தெரிவித்தார்.




