Headlines News :
Home » , » புலிகளுக்கு எதிரான தடையை நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை!

புலிகளுக்கு எதிரான தடையை நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது.
எனினும், இந்த தடையை நீக்கும் வகையில் ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது,
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதனை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இணையச் செய்திகளில் மட்டுமே தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விக்டர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் குற்றச் செயல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தகவல்களை வழங்கிய போதிலும் அதனை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது
இதன்படி, புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

Banner Ads

Friends Site