Headlines News :
Home » » வன்னியை அதிர வைத்த விபத்துக்களில்! 3 குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் பலி

வன்னியை அதிர வைத்த விபத்துக்களில்! 3 குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் பலி

வன்னியில் ஒரே நாளில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில், பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்தனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதான ஆனந் சாதனா என்ற தாயும், அவரது 03 வயதான ஆனந் யதுசிகா என்ற மகளும் மரணமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரதி என்ற பெண் புதுக்குடியிருப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இவர்கள் மூவரும், எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் நிரப்பி விட்டு புறப்பட்ட போது, எதிரே வந்த கன்டர் வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து கன்டர் ரக வாகனச் சாரதியை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
அதேவேளை, மாங்குளம் பகுதியில், நிகழ்ந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் மீது, வான ஒன்று மோதி இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. நேற்றைய இரண்டு விபத்துகளிலும் மூன்று குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.ஏ 9 வீதியின் கிளிநொச்சி, மாங்குளம் 233வது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 
சின்னத்துரை பரமேஸ்வரி (வயது 79), 
அவரது மகனான சின்னத்துரை சிவனேஸ்வரன் (வயது 43), 
சின்னத்துரை பரமேஸ்வரியின் பேரனுமான 
சோதிலிங்கம் மதீபன்(ஜெர்மனி) (வயது 35) 
சசிதரன் பதுமன் (05), 
சசிதரன் யர்மிதா (07)
ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Share this article :

Banner Ads

Friends Site