Headlines News :
Home » » கொத்தணி குண்டுகளை பயன்படுத்துமாறு அமெரிக்கா கோரியது – அரசாங்கம் பல்டி

கொத்தணி குண்டுகளை பயன்படுத்துமாறு அமெரிக்கா கோரியது – அரசாங்கம் பல்டி

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொத்தணி குண்டுகளை பயன்படுத்துமாறு அமெரிக்கா கோரியது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நோர்வேயின் மத்தியஸ்ததுடன் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட முன்னர் இவ்வாறு அமெரிக்கா கோரியிருந்தது.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை வலுப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கொத்தணி குண்டு பயன்பாடு குறித்த சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடாத போதிலும், அமெரிக்காவின் பரிந்துரைக்கு அமைய அரசாங்கம் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தணி குண்டுகளை பயன்படுத்தக் கூடிய சாத்தியங்கள் காணப்பட்ட போதிலும் அவற்றை பயன்படுத்தவில்லை என இராணுவத்தினரும், விமானப்படையினரும் தெரிவித்துள்ளனர்.
நிலக்கண்ணி வெடி அகற்றும் படையினரோ அல்லது தன்னார்வ தொண்டர்களோ இதுவரையில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான எந்தவிதமான பொருட்களையும் மீட்டதில்லை என சுட்டிகாட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்தம் முறிவடைந்தால் அதற்கான ஆயத்தங்களை துல்லியமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

Banner Ads

Friends Site