Headlines News :
Home » , , » ''புலிப்பார்வை'' பாலச்சந்திரனின் கதை திரைப்படமாகிறது

''புலிப்பார்வை'' பாலச்சந்திரனின் கதை திரைப்படமாகிறது

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. 
பாலச்சந்திரன் கதையை 'புலிப்பார்வை' என்ற பெயரில் சினிமாவாக எடுக்கிறார்கள். பிரவீன் காந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இதனை வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்கிறார்.

100 சிறுவர்களை நேர்காணல் நடத்தி பாலச்சந்திரன் போன்ற தோற்றம் கொண்ட சிறுவனை கண்டுபிடித்து நடிக்க வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்டப் போரில் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்களுடன் ஆவணப்படம் வெளியிட்ட செனல் 4 தொலைக்காட்சி பின்னர் பாலச்சந்திரன் உயிருடன் பிடிபட்டு பிஸ்கட் உண்ணும் காட்சி அடங்கிய ஆதாரத்துடன் மற்றுமொரு ஆவணப்படத்தையும் வெளியிட்டது.

இந்த ஆவணப்படத்தால் சிறீலங்காவுக்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தம் ஏற்பட்டது. சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற கோஷம் மிக வலுவாக எழுப்பப்பட்டது.
Share this article :

Banner Ads

Friends Site