துணுக்காய்ப் பகுதியில் வயல் அபிவிருத்தி வேலைகளுக்காக மேலதிகமாக மானிய அடிப்படையில் உரம் பெற்றுத் தருமாறு அப்பகுதி கமநல சேவையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை துணுக்காய் கமநல சேவை நிலையத்தில் முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவைத் திணைக்கள ஆணையாளருடன் துணுக்காய் கமநல சேவையாளர் மேற்கொண்ட கலந்து-ரையாடலின்போதே இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக முல்லைத்தீவு கமநல சேவைத் திணைக்கள ஆணையாளர் கருத்-துத் தெரிவிக்கையில்,
ஏற்கனவே இப்பகுதிக்கு மானிய உரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மேலதிகமாக மானிய உரம் தேவைப்படும் பட்சத்தில் இது தொடர்பாக எழுத்துமூலம் அறியத் தாருங்கள். இதனைத் தலைமை கமநல சேவை நிலையத்திற்கு அனுப்பி இவை தொடர்பான முடிவினை எடுக்கமுடியும் என்றார். மேலும் விவசாயிகளினால் கைவிடப்-பட்ட குளங்கள் மற்றும் திருத்தம் மேற்கொள்ள-வேண்டிய குளங்கள் போன்றவற்றையும் புனரமைத்துத் தருமாறு 35 தொடக்கம் 40 வருடங்களாக துணுக்காய்ப் பகுதியில் பாவனைக்குப் பயன்படுத்த முடியாத பல குளங்கள் காணப்படுவதாகவும் அதனைப் புனரமைப்பதன் ஊடாகத் தமது பகுதிக்கான நீர்த் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டால் விவசாயம் அபிவிருத்தி செய்யப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் சிறு குளங்களுக்குச் செல்வ-தற்கான பாதைகளும் ஒழுங்கற்றுக் காண-ப்ப-டுவதாகவும் அவர்கள் சுட்டிக்-காட்டி-யுள்ளனர்.


