Headlines News :
Home » » பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு எதிராக சிறிலங்கா தீவிரம்

பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு எதிராக சிறிலங்கா தீவிரம்

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் தமிழர் தரப்பின் இராஜதந்திர செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய கூட்டமொன்று தலைநகர் நியூயோர்க்கில் இடம்பெறுகின்ற நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு எதிரான தனது தீவிர சீற்றத்தினை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது.
சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணையொன்றினை நோக்கி அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அனைத்துலக விசாரணையொன்றினை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைச் சபையில் பங்காற்றி வருகின்ற பல்வேறு தமிழர் அமைப்புக்களை ஒருங்கிணைத்து, ஒருமுகப்படுத்தப்பட்ட தமிழர் தரப்பு இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கான முக்கிய கூட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் சீற்றங் கொண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், தனது ஊடகங்களை பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு களமிறக்கிவிட்டுள்ளது.

வி.உருத்திரகுமாரன் அவர்களை பயங்கரவாதியாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டுள்ளதோடு, தமிழீழத்தினை அமைக்கும் நோக்கில் சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா மனித உரிமைச் சபையினை கையாளுகின்றனர் எனவும் சிறிலங்கா ஊடகங்கள் தனது பிரசாரத்தினை தொடங்கியுள்ளன.
Share this article :

Banner Ads

Friends Site