Headlines News :
Home » , » பிரித்தானிய பாராளுமன்றில் நடக்கவிருக்கும் தமிழர்களின் மாபெரும் மாநாடு !

பிரித்தானிய பாராளுமன்றில் நடக்கவிருக்கும் தமிழர்களின் மாபெரும் மாநாடு !

பிரித்தானிய பாராளுமன்றில் நடக்கவிருக்கும் தமிழர்களின் மாபெரும் மாநாடு !



ஈழத்தில் இலங்கை அரசால் திட்டமிட்டு தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து பாரிய மாநாடு ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) நடத்தவுள்ளது. இதற்காக மலேசியாவில் உள்ள பினாங்கு மாநில முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி அவர்களும் லண்டன் வரவுள்ளார். பிரித்தானியாவில் உள்ள “தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு” இந்த மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. லண்டனில் உள்ள ஈழத் தமிழர்களின் விவகாரங்களை கவனிக்க ஆழும் கட்சி, எதிர் கட்சி மற்றும் மூன்றாவது கட்சியில் உள்ள பல எம்.பீக்கள் இணைந்து ஒரு குழுவை ஆரம்பித்தார்கள். அவர்களையே நாம் “தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு” என்று அழைக்கிறோம்.



தற்போது இவர்களின் அனுசரணையோடு தான் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இதனூடாக தமிழர்களின் நிலங்கள் பறிபோவது பற்றி மேற்குலகத்திற்கு எடுத்துரைக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள், அரசியல்வாதிகள் , புத்திஜீவிகள், மற்றும் தமிழ் பிரமுகர்கள் இம் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழர்கள் நிலம் பறிபோவது தொடர்பாக பேசவுள்ளார்கள். இதனூடாக ஈழத் தமிழர்களின் நிலைப்பாட்டை, நாம் பிரித்தானிய அரசுக்கு எடுத்துச் சொல்ல இது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
Share this article :

Banner Ads

Friends Site