பாடசாலை மைதானத்தில்
வைத்து எடுத்து டுவிட்டரில்
வெளியிட்ட சர்ச்சைக்குரிய படத்தையும் அதன் விளக்கத்தையும் மாற்ற
மாட்டோம் என்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. போர்க்குற்ற நிபுணர் ஸ்டீபன் ஜே.ரெப்பும்
அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசனும்
பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட
இரணப்பாலை சென்.அந்தனிஸ்
பாடசாலை மைதானத்திற்கு விஜயம்
செய்திருந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் இலங்கை இராணுவத்தினர் ஷெல்
தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்க பொதுமக்களை கொன்று குவித்ததாக அமெரிக்காவின் சமூக வலைத்தளத்தில் புகைப்பட ஆதாரத்துடன்
செய்தி வெளியாகியிருந்தது. இந்த புகைப்படத்துடனான செய்தி தொடர்பில்
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திடம்
விளக்கம் கோரப்படும் என்று வெளிவிவகார
அமைச்சின் செயலாளர் கலாநிதி கருணாதிலக்க அமுனுகம தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்கத் தூதரகம்



