Headlines News :
Home » , » திருவள்ளுவர் ஆண்டு 2045 தமிழ்ப் புத்தாண்டை வரவேற்க நேற்று சென்னை கடற்கரையில் புத்தாண்டு விழா

திருவள்ளுவர் ஆண்டு 2045 தமிழ்ப் புத்தாண்டை வரவேற்க நேற்று சென்னை கடற்கரையில் புத்தாண்டு விழா

திருவள்ளுவர் ஆண்டு 2045 தமிழ்ப் புத்தாண்டை வரவேற்க நேற்று சென்னை கடற்கரையில் புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆங்கிலப் புத்தாண்டை மட்டுமே வரவேற்று பழக்கப் பட்ட தமிழ்ச் சமூகம் இப்போது தமிழர் புத்தாண்டை சீரும் சிறப்புமாக வரவேற்று கொண்டாடியது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த தமிழர் புத்தாண்டு நிகழ்வு வழக்கம் போல் காவல்துறையின் கடும் கெடுபிடிக்கு நடுவில் கொண்டாட வேண்டி இருந்தது. தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக இந்நிகழ்வில் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்றனர்.

தமிழர் எழுச்சி இயக்கம் மற்றும் பெண்கள் செயற்களம் ஏற்பாடு செய்த இந்த புந்தாண்டு நிகழ்விற்கு தமிழர் தந்தை பழ நெடுமாறன் ஐயா குடும்பத்துடன் வந்து தமிழர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்தார். மொழிப் போர் தியாகி ஐயா கி. தா. பச்சையப்பன் , தோழர் தியாகு , திரு பொழிலன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். சிறுவர்கள் , இளையோர்கள் தங்கள் ஆடல், பாடல் , தமிழ்ப் புலமை திறமைகளை வெளிபடுத்தினர்.

திருவள்ளுவர் ஆண்டை நினைவு படுத்த 2045 பொறித்த திருவள்ளுவர் திரு உருவம் காற்றுப்பந்துகள் துணையுடன் வானில் பறக்கவிடப்பட்டது. பல நூறு தமிழர்கள் , மாணவர்கள் இந்நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர் . மாணவர்கள் சென்ற ஆண்டு நடத்திய பெரும் போராட்டத்தை பாராட்டும் வகையில் அவர்களுக்கு ஐயா நெடுமாறன் 'தமிழர் வரலாறு' நூல்களை பரிசாக வழங்கினார். இறுதியில் தமிழர் விளையாட்டுகள் நடைபெற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.


இந்த ஆண்டில் தமிழர்களின் இன்னல் நீங்கி தமிழர் மொழி உரிமை , பண்பாடு உரிமை , வழிபாட்டு உரிமை , நில உரிமை , கல்வி உரிமை, வழக்காடும் உரிமை ஆகிய அனைத்து உரிமைகளும் பெற்று நலமுடன் வாழ தமிழர்கள் நாம் ஒன்று கூடி போராட வேண்டும் என்ற சூளுரை மேற்கொள்ளப்பட்டது.
Share this article :

Banner Ads

Friends Site